நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் டி.வி.கே. என கூச்சலிட்ட வாலிபர்- சீமான் ஆவேசம்

நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் அந்த நபரை சுற்றிவளைத்து தாக்கினர்.
கூட்டத்தில் டி.வி.கே. என  கூச்சலிட்ட வாலிபரை சுற்றி வளைத்த நாம் தமிழர் கட்சி தொண்டர்கள்.
கூட்டத்தில் டி.வி.கே. என கூச்சலிட்ட வாலிபரை சுற்றி வளைத்த நாம் தமிழர் கட்சி தொண்டர்கள்.
Published on

புதுச்சேரி மேட்டுப்பாளையம் சந்திப்பில் கதிர்காமம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரசாரம் செய்தார். அப்போது பைக்கில் வந்த ஒருவர் டி.வி.கே., டி.வி.கே என்று கூச்சலிட்டார். ‘ஏன் இங்கு வந்து டீ விக்கிற, அப்படி போய் டீ வித்துட்டு போடா’ என்று சீமான் கூற பதிலுக்கு அவர் திட்டினார்.

ஆத்திரமடைந்த சீமான் ‘டே இங்க வாடா.. இங்க வந்து டீ வித்துட்டு போடா’ என கோபமாக குரல் கொடுத்தார். இதைக் கேட்ட நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் அந்த நபரை சுற்றிவளைத்து தாக்கினர்.

இதை போலீசார் தடுத்தனர். அப்போது சீமான், ‘நம் கட்சி தொண்டர்கள் அறிவார்ந்தவர்கள், த.வெ.க. கட்சியினர் தற்குறிகள், நீங்கள் போராளியின் பிள்ளைகள், அவர்கள் கோமாளியின் பிள்ளைகள்’ என்று தொண்டர்களை சீமான் சமாதானப்படுத்தினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com