

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 9, அன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. இத்தேர்தலில் 81.66% வாக்குகள் பதிவாகியுள்ளன.
புதுச்சேரியில் வழக்கமாக நிலவும் இருமுனைப் போட்டியைத் தாண்டி இம்முறை பலமுனைப் போட்டி நிலவியுள்ளது. முதலமைச்சர் என். ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணியும், திமுக, காங்கிரஸ் இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணியும், வழக்கம்போல நாம் தமிழர் தனித்தும், புதிதாக விஜய்யின் தவெகவும் களம் கண்டுள்ளன.
இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தற்போது ஆட்சியில் இருக்கும் என்.ஆர்.காங்கிரஸ் இடம்பெற்றுள்ள கூட்டணியே மீண்டும் ஆட்சிக்கு வரும் என தெரிவித்துள்ளது.
ஆக்ஸிஸ் மை இந்தியா பின்வரும் கணிப்புகளை வெளியிட்டுள்ளது;
என்.டி.ஏ.கூட்டணி - 16-20
இந்தியா கூட்டணி - 6-8
தவெக கூட்டணி - 2-4
மற்றவை - 1-3
காமக்யா அனாலிட்டிக்ஸ்
என்.டி.ஏ.கூட்டணி- 17-24
இந்தியா கூட்டணி - 4-7
தவெக கூட்டணி - 1-4
மற்றவை - 0-1
பிரஜா கருத்துக்கணிப்பு
என்.டி.ஏ.கூட்டணி - 19-25
இந்தியா கூட்டணி - 6-10
தவெக கூட்டணி - 0
மற்றவை - 0
பீப்புள்ஸ் பல்ஸ் கருத்துக்கணிப்பு
என்.டி.ஏ.கூட்டணி - 16-19
இந்தியா கூட்டணி - 10-12
தவெக கூட்டணி - 0
மற்றவை - 1-2