புதுச்சேரி சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது TVK

புதுச்சேரி சட்டசபைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற உள்ளது.
 விஜய்
விஜய்
Published on

புதுச்சேரியின் 30 சட்டசபைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 24-ம் தேதியுடன் புதுவையில் வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெறுகிறது.

இந்நிலையில், புதுச்சேரியில் போட்டியிடும் 30 பேர் கொண்ட த.வெ.க வேட்பாளர் பட்டியலை விஜய் இன்று வெளியிட்டார்.

லாஸ்பேட்டை: சாமிநாதன், ராஜ்பவன்: சந்திரன், முத்தியால்பேட்டை: பிரகாஷ்குமார், அரியாங்குப்பம்: குமரவேலு, உருளையன்பேட்டை: மரிய பிரான்சிஸ், வில்லியனூர்: ரமேஷ், ஏனாம்: தோட்டா ராஜு உள்ளிட்ட 30 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.

மேலும், விசில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com