தேசிய ஜனநாயக கூட்டணியில் த.வெ.க. இணைகிறதா? - புதுச்சேரி முதலமைச்சர் விளக்கம்

சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டது.மன்சுக் மாண்டவியா தலைமையில் என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜ.க. தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் த.வெ.க. இணைகிறதா? - புதுச்சேரி முதலமைச்சர் விளக்கம்
Published on

புதுச்சேரி:

புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட கூட்டம் தனியார் ஓட்டலில் நேற்று இரவு நடந்தது. கூட்டத்தின் முடிவில் முதலமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டது. இன்று மாலை மத்திய மந்திரியும் பா.ஜ.க. மேலிட பொறுப்பாளருமான மன்சுக் மாண்டவியா தலைமையில் என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜ.க. தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அவரிடம் தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்யின் த.வெ.க. கட்சியை சேர்க்க முயற்சி நடக்கிறதா? என்ற கேள்விக்கு அதுபற்றி தனக்கு தெரியாது என அவர் பதிலளித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com