புதுவையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை- பெட்ரோலிய நிறுவனங்கள் தகவல்

விற்பனை தொகை கட்டாத சில தனியார் பெட்ரோல் பங்கில் டீசல், பெட்ரோல் இருப்பு இல்லாமல் மூடப்பட்டுள்ளது.
புதுவையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை- பெட்ரோலிய நிறுவனங்கள் தகவல்
Published on

புதுவையில் இந்தியன் ஆயில், இந்துஸ்தான், பாரத் பெட்ரோலியம், ஷெல், ஜியோ உட்பட நிறுவனங்களின் பெட்ரோல் பங்குகள் உள்ளன.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு புதுவையில் பெட்ரோல், டீசல் விற்பனை வழக்கத்தை விட கூடுதலாக நடந்து வருகிறது. இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தும் வாகனங்களில் டீசல், பெட்ரோல் நிரப்ப சில கட்சியினர் கடனில் வாங்குகின்றனர்.

இதனால் விற்பனை தொகை முழுமையாக கிடைப்பதில் தாமதம் ஏற்படும் நிலையால், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தங்கள் பெட்ரோல் நிறுவனங்களில் கடனுக்கு பெட்ரோல், டீசல் வழங்க கோரினர். ஆனால் பெட்ரோலிய நிறுவனங்கள் தற்போதைய போர் சூழ்நிலையிலும், தட்டுப்பாடு ஏற்படாமல் பெட்ரோலிய பொருட்களை வழங்கி வருகிறோம்.

எனவே கடனுக்கு வழங்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர். விற்பனை தொகை கட்டும் பெட்ரோல் பங்குகளுக்கு தாராளமாக பெட்ரோலிய பொருட்கள் கிடைக்கும் என தெரிவித்தனர். இந்த விற்பனை தொகை கட்டாத சில தனியார் பெட்ரோல் பங்கில் டீசல், பெட்ரோல் இருப்பு இல்லாமல் மூடப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு எதுவும் புதுவையில் இல்லை என பெட்ரோலிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com