இளம்பெண் மயங்கி விழுந்து சாவு

புதுவை கோரிமேடு ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் முருகன். கட்டிட தொழிலாளி.இடையில் புனிதவதிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை கோரிமேடு ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் முருகன். கட்டிட தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி கார்த்திகா என்ற மனைவியும், 2 மகள்க ளும் உள்ள நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கோரிமேடு ராஜா அண்ணாமலை நகரை சேர்ந்த புனிதவதி(28) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

புனிதவதி மேட்டுப் பாளையத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இடையில் புனிதவதிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

மேலும் கடந்த 20 நாட்களாக புனிதவதிக்கு மூச்சு திணறல் அடிக்கடி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை புனிதவதி வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். உடனே புனித வதியை அவரது கணவர் முருகன் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே புனிதவதி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com