கவர்னர் தமிழிசையுடன் புகைப்படம் எடுத்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

கவர்னர் தமிழிசை மணக்குள விநாயகர் கோவிலுக்கு வந்தார்.இத்தாலி நாட்டைச் சேர்ந்த 15-க்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மணக்குள விநாயகரை தரிசிக்க வந்தனர்.
கவர்னர் தமிழிசையுடன் புகைப்படம் எடுத்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
Published on

புதுச்சேரி:

டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை கடந்த 2 நாட்களுக்கு முன்பு கவர்னர் தமிழிசை சந்தித்தார்.

புதுவை திரும்பிய கவர்னர் தமிழிசை மணக்குள விநாயகர் கோவிலுக்கு நேற்று மாலை வந்தார். மணக்குள விநாயகரை வழிபட்ட அவருக்கு ஆள் உயர மாலை அணிவிக்கப்பட்டது. மாலையை அணிந்தபடி மகிழ்ச்சியுடன் கோவிலை கவர்னர் தமிழிசை வலம் வந்தார். அப்போது இத்தாலி நாட்டைச் சேர்ந்த 15-க்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மணக்குள விநாயகரை தரிசிக்க வந்தனர்.

அவர்களுடன் கவர்னர் தமிழிசை கலந்துரையாடினார். தொடர்ந்து இத்தாலி சுற்றுலா பயணிகள் கவர்னர் தமிழிசையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

பின்னர், காரில் ஏறிய கவர்னர் தமிழிசையிடம் பஞ்சாப்பை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர்.

உடனடியாக அவர் காரில் இருந்து இறங்கி பஞ்சாப் சுற்றுலா பயணிகளுடனும் புகைப்படங்கள் எடுத்து கொண்டு மகிழ்ச்சியுடன் புறப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com