புதுச்சேரியில் பழனிச்சாமி.. ரிசார்ட்டில் தங்கியுள்ள அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசனை

வெயில் அதிகம் உள்ளதால் புதுச்சேரிக்கு வந்ததாக அதிமுக அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் பேட்டியில் தெரிவித்தார்.
புதுச்சேரியில் பழனிச்சாமி.. ரிசார்ட்டில் தங்கியுள்ள அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசனை
Published on

புதுச்சேரியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் நடப்பு தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் வெயில் அதிகம் உள்ளதால் புதுச்சேரிக்கு வந்ததாக அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் பேட்டியில் தெரிவித்தார்.

இன்று ஆளுநரை சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரம் கேட்டதாக கூறப்பட்ட நிலையில் திடிரென சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றார். அவரை வரவேற்ற அதிமுகவினர், நாளைய முதல்வர் என கோஷமிட்டு ஆரவாரித்தனர்.

தொடர்ந்து ரிசார்ட்டில் உள்ள எம்எல்ஏக்களுடன் மாலை ஆலோசனையில் இபிஎஸ் ஈடுபட்டார். சிவி சண்முகம் உள்ளிட்டோர் தவெக ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் பழனிச்சாமியின் திடீர் புதுச்சேரி பயணமும் ஆலோசனையும் கவனம் பெற்றுள்ளது.

திமுகவில் இருந்து தாவிய காங்கிரஸ் 5 இடங்களை சேர்த்து தவெகவிடம் 113 இடங்கள் உள்ளது.

பெருமான்மைக்கு இன்னும் தேவைப்படும் நிலையில் அக்கட்சிக்கு ஆதரவு இல்லை என அதிமுக திட்டவட்டமான தெரிவித்திருந்தது. தவெக பொதுச்செயலாளர் இபிஎஸ் இல்லத்திற்கு சென்று ஆதரவு கேட்டது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com