விசிக ஆதரவு கேட்டு விஜய் கடிதம்- ரவிக்குமார் எம்.பி. தகவல்

மும்மொழி கொள்கையை அவர் ஏற்கும்போதே விசிக சுட்டிக்காட்டி கண்டித்தது. மும்மொழி கொள்கையில் 3வது மொழியாக பிரெஞ்சு இருக்கும் என்பதால் அமைதியாக இருந்தோம்.
விசிக ஆதரவு கேட்டு விஜய் கடிதம்- ரவிக்குமார் எம்.பி. தகவல்
Published on

புதுச்சேரி:

விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் எம்.பி. ரவிக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியை கட்டாயம் படிக்க புதுச்சேரி மக்களிடம் திணித்துள்ளனர். மும்மொழி கொள்கையை நாங்கள் ஏற்பதில்லை. இரு மொழி கொள்கையே சரியானது. பாஜக கூட்டணி அமைத்தபிறகு அவர்கள் அழுத்தத்துக்கு ரங்கசாமி பணிந்து, நம் மக்களின் மொழி உரிமையை விட்டு கொடுத்துள்ளார்.

மும்மொழி கொள்கையை அவர் ஏற்கும்போதே விசிக சுட்டிக்காட்டி கண்டித்தது. மும்மொழி கொள்கையில் 3வது மொழியாக பிரெஞ்சு இருக்கும் என்பதால் அமைதியாக இருந்தோம். மும்மொழி கொள்கை என்பதே இந்தி திணிப்பின் தந்திரம் என்பதை புதுச்சேரியில் பாஜக நிருபித்துள்ளது.

இதனால்தான் தமிழகத்தில் மும்மொழி கொள்கையை ஏற்கமாட்டோம் என இதுவரை திமுக அரசு உறுதியாக இருந்தது.

புதுச்சேரி அரசு அரசாணையை திரும்ப பெறவேண்டும். பிரெஞ்சு படிக்க ஏற்பாடு செய்து, இந்தி திணிக்கும் முயற்சிக்கு அரசு உடந்தையாக இருக்கக்கூடாது. இந்தியை திணித்தால் ஏற்க மாட்டோம்.

காங்கிரஸ், இடதுசாரிகள் விடுதலை சிறுத்தைகள் ஆகியவற்றின் ஆதரவை விஜய் தலைமையிலான தவெக கேட்டுள்ளது. விசிக தலைவர் திருமாவளவனுக்கும், இந்த ஆதரவு கேட்டு கடிதம் வந்துள்ளது.

இது தொடர்பாக எங்கள் தலைவர் உரிய விளக்கம் அளிப்பார்கள். இதுவரை தவெக மதசார்பற்ற கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது உறுதியாக இருக்கிறது. அதனால்தான் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றின் ஆதரவை கோரியுள்ளனர்.

இவ்வாறு ரவிக்குமார் எம்பி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com