பா.ஜ.க.வினர் சொல்வதை செய்வார்கள்: நிதிஷ் குமார் நிலை எனக்கு ஏற்படாது- ரங்கசாமி

நாங்கள் ஆட்சிக்கு திரும்ப வரவேண்டும் என்று தான் வாக்களிக்கிறார்கள்.
பா.ஜ.க.வினர் சொல்வதை செய்வார்கள்: நிதிஷ் குமார் நிலை எனக்கு ஏற்படாது- ரங்கசாமி
Published on

முதல்- அமைச்சர் ரங்கசாமி வாக்களித்த பிறகு தொகுதி வாரியாக சென்று பார்வையிட்டு அங்குள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தார். அப்போது வில்லியனூர் புறவழிச்சாலையிலுள்ள டீக்கடைக்கு சென்று டீ, அதிரசம் சாப்பிட்டு பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்வியும் பதிலும் வருமாறு:-

Q

வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது யாருக்கு சாதகமாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?

A

மக்கள் விழிப்புணர்வுடன் அதிகளவில் வாக்களிக்கின்றனர். மக்கள் நலத்திட்டங்கள் அவர்களுக்கு சென்றடைந்துள்ளதும் ஓர் காரணம். நாங்கள் ஆட்சிக்கு திரும்ப வரவேண்டும் என்று தான் வாக்களிக்கிறார்கள். வாக்களிப்பு கிராமங்களில் அதிகமாக உள்ளதும் இதற்கு ஓர் காரணம்.

Q

நீங்கள் பிரசாரத்துக்கு வந்தபோது கிராமத்தில்தானே உங்களிடம் அதிகம் கேள்வி கேட்டார்கள்?

A

ஆமாம். நான் செய்வதால் என்னிடம் கேட்டார்கள். கடந்த மக்களவைத் தேர்தலின்போது ரேஷன் கடை திறந்து அரிசி, கோதுமை கேட்டார்கள், நானும் ரேஷன் கடை திறந்து இலவச அரிசி, கோதுமை தந்தேன். தற்போதும் தங்கள் தேவைகளை என்னிடம் கேட்டார்கள். நான் செய்வேன் என்பதும் அவர்களுக்கு தெரியும்.

Q

இந்த முறை எத்தனை இடங்கள் வெல்வீர்கள்..?

A

ஆட்சியமைக்கும் அளவுக்கு தேர்தலில் வெல்வோம்.

Q

எதிர்க்கட்சியினர் நிதிஷ்குமாரின் நிலைதான் உங்களுக்கு ஏற்படும் என்கிறார்களே.?

A

அதுபோல் ஏற்படாது. என் தலைமையில்தான் ஆட்சி அமையும் என்று பா.ஜ.க.வினர் சொல்லியுள்ளார்கள். அவர்கள் சொல்வதை செய்வார்கள். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து பல திட்டங்கள் செயல்படுத்தினோம்.

Q

கூட்டணி கட்சி தொகுதிகளுக்கு ஏன் பிரசாரம் செல்லவில்லை?

A

கூட்டணிக்கட்சியில் பெரியத்தலைவர்கள் பிரசாரத்துக்கு வந்தார்கள். நான்தான் என் கட்சிக்கு செல்ல வேண்டும். நாட்களும் குறைவாக இருநத்து. அதனால்தான் சென்றேன். ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை இலக்காக வைத்துதான் நாங்கள் அனைவரும் பிரசாரம் செய்தோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com