Puducherry Assembly Election| சேலம் அப்பா பைத்தியசாமி கோவிலில் வழிபாடு நடத்தி வாக்களித்து உள்ளேன்: ரங்கசாமி

வாக்கு அளித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்.
Puducherry Assembly Election| சேலம் அப்பா பைத்தியசாமி கோவிலில் வழிபாடு நடத்தி வாக்களித்து உள்ளேன்: ரங்கசாமி
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் மோட்டார் சைக்கிளில் வந்து தனது வாக்கை செலுத்திய பின் முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

வாக்கு அளித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும். மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. தேர்தலுக்கு முன் நாள், சேலம் அப்பா பைத்தியசாமி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்திவிட்டு மறுநாள் காலை வாக்குப்பதிவு செய்வது வழக்கம். அதே போல் தற்போதும் நான் வழிபாடு செய்துவிட்டு வாக்களித்துள்ளேன்.

இவ்வாறு ரங்கசாமி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com