தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக விரைவில் பதவி ஏற்பார் - ரங்கசாமி உறுதி

சீக்கிரமே விஜய் பதவி ஏற்பார். தமிழகத்தில் ஆட்சி அமையும் என்று ரங்கசாமி கூறினார்.
தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக விரைவில் பதவி ஏற்பார் - ரங்கசாமி உறுதி
Published on

புதுவை முதலமைச்சர் ரங்கசாமி தனது பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை கவர்னர் கைலாஷ்நாதனிடம் வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

புதிய ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கவர்னரிடம் கடிதம் கொடுத்துள்ளேன். விரைவில் புதிய அரசு பதவியேற்கும். தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் முடிந்த பிறகு ஆட்சி அமைக்க உரிமை கோரும் வரும் கடிதம் கொடுப்பேன் என தெரிவித்தார்.

அவரிடம், அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் விஜய் ஆட்சி அமைக்க திணறுகிறாரே? என கேட்டபோது, விஜய்க்கு வாழ்த்துகள். சீக்கிரமே அவர் பதவி ஏற்பார். தமிழகத்தில் ஆட்சி அமையும் என கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com