

புதுச்சேரியின் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
வரும் 24ம் தேதியுடன் புதுவையில் வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெறுகிறது.
இந்நிலையில், புதுச்சேரி த.வெ.க வேட்பாளர் பட்டியலை விஜய் நாளை வெளியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தமுள்ள 30 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டியிடுகிறது.
மார்ச் 23-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், நாளை (ஞாயிற்றுக்கிழமை) அல்லது திங்கட்கிழமை காலையில் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.