Puducherry Assembly Election| அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து ஏப்.6-ந்தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா பிரசாரம்

பொதுகூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்து வேட்பாளர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
Puducherry Assembly Election| அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து ஏப்.6-ந்தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா பிரசாரம்
Published on

புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க, அ.தி.மு.க., ல.ஜ.க., ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வருகிற 3-ந்தேதி ரோடுஷோ நடத்த உள்ளார். மத்திய மந்திரி அமித்ஷா வருகிற 6-ந்தேதி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார்.

மண்ணாடிப்பட்டு தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து பொதுகூட்டத்தில் பங்கேற்கிறார். இற்காக மண்ணாடிப்பட்டு திருக்கனூர் பகுதியில் பொதுகூட்டம் நடத்த இடம் தேர்வு செய்யும் பணி அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடந்தது.

இதில் காவல்துறை அதிகாரிகள், பா.ஜ.க. நிர்வாகிகள் பஙகேற்றனர். திருக்கனூர் கடை வீதியில் பிரம்மாண்ட மேடை அமைத்து பொதுகூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த பொதுகூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்து வேட்பாளர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com