மத்திய மந்திரி அமித்ஷாவை சந்திக்க டெல்லிக்கு செல்கிறார் அமைச்சர் நமச்சிவாயம்

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். ஆனால் அப்போது நேரம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மத்திய மந்திரி அமித்ஷாவை சந்திக்க நாளை நேரம் கிடைத்துள்ளது.
மத்திய மந்திரி அமித்ஷாவை சந்திக்க டெல்லிக்கு செல்கிறார் அமைச்சர் நமச்சிவாயம்
Published on

புதுவையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.

கடந்த 13-ந்தேதி முதல்-அமைச்சர் ரங்கசாமியோடு, பாஜகவைச் சேர்ந்த நமச்சிவாயம், என்.ஆர்.காங்கிரஸைச் சேர்ந்த மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் கடந்த வாரம் டெல்லி சென்றார்.

அப்போது பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய தலைவர் நிதின் நபீன், அமைப்பு செயலர் சந்தோஷ், மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா ஆகியோரை சந்தித்து பேசினார்.

அதோடு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். ஆனால் அப்போது நேரம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மத்திய மந்திரி அமித்ஷாவை சந்திக்க நாளை நேரம் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அமைச்சர் நமச்சிவாயம் இன்று மாலை சென்னையிலிருந்து டெல்லிக்கு செல்கிறார். அங்கு மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது, புதுச்சேரி அரசு நிலவரம் குறித்து மத்திய மந்திரி அமித்ஷாவுடன் அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்த உள்ளார்.

புதுச்சேரியில் இன்னும் 3 அமைச்சர்கள் பதவியேற்க வேண்டியுள்ளது. அதில் ஒரு அமைச்சர் பதவி, சபாநாயகர் பதவி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர், சபாநாயகராக யாரை நியமிப்பது, பெற வேண்டிய இலாக்காக்கள் ஆகியன குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com