Delimitation| தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: புதுவையில் திமுக- கம்யூனிஸ்ட்டு நிர்வாகிகள் வீடுகளில் கருப்புக்கொடி

திமுக தலைமை அலுவலகம் முன்பு திமுக மாநில அமைப்பாளர் சிவா கருப்புச்சட்டை அணிந்து, கருப்புக்கொடி ஏற்றினார்.
Delimitation| தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: புதுவையில் திமுக- கம்யூனிஸ்ட்டு நிர்வாகிகள் வீடுகளில் கருப்புக்கொடி
Published on

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட உள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

தொகுதி மறுவரையறை என்ற பெயரில் மத்திய பாஜனதா அரசு தென்னிந்திய மாநிலங்களின் தொகுதிகளை குறைத்து வஞ்சிக்க திட்டமிட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். தமிழகத்தில் இன்று கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடத்தவும் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

இதை பின்பற்றி புதுவை மாநில திமுக சார்பில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடந்தது. இதற்கு இந்திய கம்யூனிஸ்ட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இதையொட்டி இன்று லப்போர்த் வீதியில் உள்ள திமுக தலைமை அலுவலகம் முன்பு திமுக மாநில அமைப்பாளர் சிவா கருப்புச்சட்டை அணிந்து, கருப்புக்கொடி ஏற்றினார். தொடர்ந்து மசோதா நகலை எரித்தனர். நிகழ்ச்சியில் எம்எல்ஏ அனிபால்கென்னடி, முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி, திமுக வேட்பாளர்கள் கோபால், விக்னேஷ் சிவன் மற்றும் நிர்வாகிகளும் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.

இதேபோல இந்திய கம்யூனிஸ்ட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு, விடுதலைசிறுத்தைகள் கட்சி அலுவலகங்கள், கட்சி நிர்வாகிகள், பிரமுகர்களின் வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com