பா.ஜ.க ஆதரவு... டிசம்பரில் புதுக்கட்சி - அரசியலில் எண்ட்ரியாகும் லாட்டரி அதிபர் மகன்!

விஜய் பாணியில் அரசியல் பிரவேசம்.காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிடும் சார்லஸ் மார்ட்டின்.
பா.ஜ.க ஆதரவு... டிசம்பரில் புதுக்கட்சி - அரசியலில் எண்ட்ரியாகும் லாட்டரி அதிபர் மகன்!
Published on

ம.தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட மல்லை சத்யா நேற்று திராவிட வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கிய நிலையில், டிசம்பரில் தானும் ஒரு கட்சியைத் தொடங்க உள்ளதாக லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் விஜய் களமிறங்கிய அதேபாணியில், புதுச்சேரி அரசியலில் களமிறங்க நீண்டநாட்களாக ஆர்வம் காட்டி வருபவர் சார்லஸ் மார்ட்டின். இதற்காக பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். ஜேசிஎம் மக்கள் மன்றம் பெயரில் நலத்திட்ட உதவிகள் சில செய்தாலும், பாஜக எம்எல்ஏக்களோடு கூடுதல் நெருக்கம் காட்டி வருபவர். இதனால் சார்லஸ் பாஜகவின் 'பி டீம்' எனவும் புதுச்சேரி காங்கிரஸ் பல விமர்சனங்களை முன்வைத்தது.  

இந்நிலையில் டிசம்பரில் தான் ஒரு புதிய கட்சியைத் தொடங்க உள்ளதாக சார்லஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார். 2026-ல் பாஜக சார்பில் போட்டியிடுவார் என பலரும் நினைத்திருந்த நிலையில், திடீரென புதிய கட்சியைத் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய ஜார்லஸ், "டிசம்பர் மாதத்தில் கட்சி அறிவிக்கப்படும். தொடர்ந்து பாதயாத்திரை உள்ளிட்ட விஷயங்களை திட்டமிட்டுள்ளோம். மேலும் அரசின் தவறுகளை சுட்டிக் காட்டி அடுத்தடுத்து பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம்." என தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டு நடைபெற உள்ள புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் 30 இடங்களிலும் போட்டியிட கட்சி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. புதுச்சேரியின் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் 30 எம்எல்ஏக்களின் தொகுதிகளில் 25 தொகுதிகளில் ஜே.சி.எம் மக்கள் மன்றம் முன்னிலை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com