கடற்கரை மணலில் முதலமைச்சர் விஜய் பெயரை எழுதி வாழ்த்து சொன்ன குழந்தைகள்

கடற்கரையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.
கடற்கரை மணலில் முதலமைச்சர் விஜய் பெயரை எழுதி வாழ்த்து சொன்ன குழந்தைகள்
Published on

கோடை விடுமுறையையொட்டி காரைக்கால் கடற்கரையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுைற நாளான தமிழக பகுதியான நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்தவர்களுடன் உள்ளூர்வாசிகள் காரைக்கால் கடற்கரையில் குவிந்தனர்.

குழந்தைகள், பெண்கள் கடற்கரையில் குவிந்து கடலில் குளித்து உற்சாகமடைந்தனர். அதே நேரத்தில் கடற்கரை மணலில் குழந்தைகள் ஒன்று கூடி டி.வி.கே. விஜய், ஜோசப் விஜய் சி.எம். சார், என்று எழுதி வாழ்த்து தெரிவித்தனர்.

இதனை கடல் அலை அழித்த போதும் மீண்டும் மீண்டும் உற்சாகமாக எழுதினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com