மின்துறை ஊழியர் மயங்கி விழுந்து சாவு

புதுவை அருகே வில்லியனூர் பகுதியில் மின்துறை ஊழியர் மயங்கி விழுந்து இறந்து போனார்.பச்சையப்பன் பேச்சு மூச்சுயின்றி மயங்கிய நிலையில் இருந்தார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

வில்லியனூர் அருகே மின்துறை ஊழியர் மயங்கி விழுந்து இறந்து போனார்.

வில்லியனூர் அருகே உருவையாறு-பாகூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பச்சையப்பன்(வயது56). புதுவை அரசு மின்துறையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு விஜயா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். பச்சையப்பனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.

இந்த நிலையில் வெளியே சென்று விட்டு இரவு 11 மணியளவில் பச்சையப்பன் வீட்டுக்கு வந்தார். பின்னர் சாப்பிட்டு விட்டு தூங்கினார். பார்த்த போது பச்சையப்பன் பேச்சு மூச்சுயின்றி மயங்கிய நிலையில் இருந்தார்.

இதனை கண்ட குடுபம் பத்தினர் அதிர்ச்சியடைந்து உடனே பச்சையப்பனை காரில் கரிக்கலாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பச்சையப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அவரது மகன் பாஸ்கரன் கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com