

புதுவையில் அரசு பள்ளிகள் அனைத்தும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
புதுவை, காரைக்காலில் உள்ள 100 தனியார் பள்ளிகள் தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றி வருகின்றன. தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளின் பிளஸ்2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.
புதுவையில் உள்ள பள்ளிகளில் 54 பள்ளிகள், காரைக்காலில் 9 பள்ளிகள் என மொத்தம் 63 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.புதுவை, காரைக்காலில் 3 ஆயிரத்து 890 மாணவர்கள், 3 ஆயிரத்து 607 மாணவிகள் என மொத்தம் 7 ஆயிரத்து 497 பேர் தேர்வு எழுதினர்.
இதில் 3 ஆயிரத்து 811 மாணவர்கள், 3 ஆயிரத்து 579 மாணவிகள் என 7ஆயிரத்து 390 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்ச்சி சதவீதம் 98.57 ஆகும். புதுவையில் தேர்வு எழுதிய 3 ஆயிரத்து 636 மாணவர்களில் 3 ஆயிரத்து 566 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 3 ஆயிரத்து 259 மாணவிகளில் 3 ஆயிரத்து 236 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
காரைக்காலில் தேர்வு எழுதிய 254 மாணவர்களில் 245 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 348 மாணவிகளில் 343 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இயற்பியலில் 3, வேதியியலில் 6, உயிரியலில் 9, கணிப்பொறி அறிவியலில் 190, கணிதத்தில் 5, தாவரவியலில் 1, விலங்கியிலில் 1, பொருளியலில் 12, வணிகவியலில் 27, கணக்கு பதிவியலில் 36, வணிக கணிதத்தில் 13, கணிப்பொறி பயன்பாட்டில் 69, வரலாற்றில் 3, தமிழிலில் 2, பிரெஞ்சு மொழியில் 123 பேர் என மொத்தம் 500 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.