வேலூர் தொகுதியில் விஜயகாந்த் பிரசாரம் செய்வார்- பிரேமலதா

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்வார் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.
பிரேமலதா
பிரேமலதா
Published on

சென்னை கே.கே.நகரில் உள்ள கட்சி நிர்வாகி ஒருவரின் நிகழ்ச்சியில் பங்கேற்க தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா வந்தார். நிகழ்ச்சிக்கு பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தே.மு.தி.க. தயாராக உள்ளது. அ.தி.மு.க.வுடான கூட்டணி தொடரும். வேலூர் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யாமல் தேர்தலை ரத்து செய்தது நியாயம் அல்ல. தற்போது அதே வேட்பாளர் போட்டியிடுகிறார். பணப்பட்டுவாடா நடக்கிறது. தகுதி நீக்கம் செய்திருந்தால் இதற்கு தீர்வு வந்திருக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com