முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு ராணுவ மருத்துவமனையில் வென்டிலேட்டர் சிகிச்சை

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு ராணுவ மருத்துவமனையில் வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிரணாப் முகர்ஜி
பிரணாப் முகர்ஜி
Published on

புதுடெல்லி:

காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் நாட்டின் 13வது ஜனாதிபதியாக பதவி வகித்தவர் பிரணாப் முகர்ஜி.  அவருக்கு கொரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மருத்துவமனைக்கு பரிசோதனை ஒன்றிற்காக சென்றபொழுது, எனக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  அதில் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

அதனால், கடந்த வாரம் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தயவுகூர்ந்து சுய தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.  கொரோனா பரிசோதனையையும் செய்து கொள்ளும்படி கேட்டு கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து பிரணாப் முகர்ஜிக்கு மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.  அவரது மூளையில் இருந்து கட்டி ஒன்று நீக்கப்பட்டது.  நேற்றிரவு நடந்த இந்த சிகிச்சைக்கு பின்னர் டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com