

கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே, அரசு ஆஸ்பத்திரிகள் மட்டுமின்றி தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா சிகிச்சை வார்டுகள் தொடங்கப்பட்டுள்ளன. அதேபோல, மதுரை மாவட்டம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், பெரும்பாலானோர் திடீர் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல், இருமல் மற்றும் தலைவலியால் அவதிப்படுகின்றனர். இவர்களும் அருகிலுள்ள சிறிய ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக செல்கின்றனர். அதேசமயத்தில், கொரோனா அறிகுறி இருப்பவர்களும் ஆஸ்பத்திரிகளுக்கு சென்று வருகின்றனர்.
இது குறித்து, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆஸ்பத்திரிகளுக்கு தனி வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. அதன்படி, கொரோனா சிகிச்சை வழங்கும் ஆஸ்பத்திரிகளும், பிற சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரிகளும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வழிகாட்டுதல் படி, மருத்துவ கழிவுகளை அழிக்க வேண்டும்.