மும்பையில் தேர்தல் பிரச்சாரம் - சத்ரபதி சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து பிரதமர் மோடி மரியாதை

மகாராஷ்டிராவில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த பிரதமர் மோடி, மும்பையில் நடந்த கூட்டத்தில் சத்ரபதி சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சிவாஜி சிலைக்கு மலர் தூவி வணங்கும் பிரதமர் மோடி
சிவாஜி சிலைக்கு மலர் தூவி வணங்கும் பிரதமர் மோடி
Published on

மும்பை:

அரியானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வரும் 21ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே, அரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று கலந்துகொண்டார். பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அங்கிருந்து அவர் மகாராஷ்டிரா சென்றார்.

இந்நிலையில், மகாராஷ்டிரா தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி இன்று மாலை வந்தார். மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அவர் சத்ரபதி சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த கூட்டத்தில் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com