பிளஸ்-2 தேர்வு முடிவு மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ்.சில் அனுப்பப்படும்

வருகிற 16-ந் தேதி வெளியாகும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மாணவர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. #Plus2Result #ExamResults
பிளஸ்-2 தேர்வு முடிவு மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ்.சில் அனுப்பப்படும்
Published on

சென்னை:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ந் தேதி முதல் ஏப்ரல் 6-ந் தேதி வரை நடைபெற்றது. 6 ஆயிரத்து 903 மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ-மாணவிகள், 40 ஆயிரத்து 686 தனித் தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதினர்.

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வருகிற 16-ந் தேதி (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டை போல மாணவர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும்.

பள்ளியின் இ-மெயில் முகவரிக்கு நேரடியாக அட்டவணைப்படுத்தப்பட்ட பிளஸ்-2 மதிப்பெண் பட்டியலை அனுப்பவும் தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

அரசு தேர்வுத்துறை இயக்கத்தின் அனைத்து செயல்பாடுகளும் ஆன்லைன் முறையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்வு முடிவுகளை முன்கூட்டியே பள்ளிகள் அறிந்து கொள்வதை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய பட்டியலை பள்ளிகளுக்கு அனுப்பும் புதிய முறையை அரசு தேர்வுத் துறை இயக்ககம் அறிமுகம் செய்துள்ளது.

தேர்வு தொடர்பான புள்ளி விவரங்கள் அடங்கிய பகுப்பாய்வு அறிக்கையை பத்திரிகையாளர்கள், இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளும் புதிய முறையை இந்த ஆண்டு முதல் தேர்வுத்துறை அறிமுகப்படுத்த உள்ளது. #Plus2Result #ExamResults

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com