பிரதமர் மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

டெல்லியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது தமிழக பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர்.
பிரதமர் மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு
Published on

சென்னை:

முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லி சென்றுள்ளார்.

டெல்லியில் ஓ.பன்னீர் செல்வம் இன்று பிரதமர் மோடியை சந்தித்தார்.

அப்போது நீட்தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டம், கதிராமங்கலம் பிரச்சனை போன்றவற்றில் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழகத்துக்கு சாதகமான நடவடிக்கைகளை எடுக்கும்படி வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பின்போது மைத்ரேயன் எம்.பி., கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், செம்மலை எம்.எல்.ஏ., மனோஜ்பாண்டியன், சத்தியபாமா எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com