சொத்து பதிவை ஆதாருடன் இணைக்க வேண்டிய அவசியமில்லை - பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்

சொத்து பதிவை ஆதாருடன் இணைக்க வேண்டிய அவசியமில்லை - பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்

சொத்து பதிவு தொடர்பான விவரங்களுடன் ஆதாரை கட்டாயம் இணைக்கவேண்டிய அவசியம் இல்லை என மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் மந்திரி ஹர்தீப்சிங் புரி கூறியுள்ளார்
Published on

புதுடெல்லி:

மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் மந்திரி ஹர்தீப்சிங் புரி கடந்த மாதம் சொத்து பதிவு தொடர்பான தகவல்களை ஆதாருடன் இணைப்பது பற்றி பரிசீலிக்கப்படும், இது நல்லதொரு யோசனைதான் என்று கூறி இருந்தார்.

இது குறித்து பாராளுமன்றத்தில் எம்.பி. ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மந்திரி ஹர்தீப்சிங் புரி நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

அதில் அவர் கூறுகையில், “தற்போதைய நிலையில் சொத்து பதிவு தொடர்பான விவரங்களுடன் ஆதாரை கட்டாயம் இணைக்கவேண்டிய அவசியம் இல்லை. இது தொடர்பாக மத்திய அரசிடம் எந்த பரிந்துரையும் கிடையாது. அதே நேரம் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை சொத்து பதிவுக்கு ஆதாரை சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதலுடன் இணைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளனவா? என்பது பற்றி ஆய்வு செய்யும்படி அறிவுறுத்தி உள்ளது” என்று தெரிவித்து இருந்தார். 

X

Maalai Malar
www.maalaimalar.com