டெல்லியில் அம்பேத்கர் இறந்த இடம் நினைவு இல்லம் ஆக்கப்படும்- பிரதமர் மோடி

டெல்லியில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் உயிர் பிரிந்த வீடு வரும் 13-ம் தேதி நினைவு இல்லமாக நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் என பிரதமர் மோடி இன்று தெரிவித்துள்ளார். #Ambedkar #NarendraModi
டெல்லியில் அம்பேத்கர் இறந்த இடம் நினைவு இல்லம் ஆக்கப்படும்- பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி:

டெல்லியில் பாராளுமன்ற எம்.பி.க்களுக்கான புதிய குடியிருப்பு பகுதி விரிவாக்க நிகழ்ச்சியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றி உரையாற்றினார்.

அம்பேத்கரின் பெயரை அனைவருமே அரசியல் லாபத்துக்காக பயன்படுத்துவதாக குறிப்பிட்ட அவர், முந்தைய பா.ஜ.க. ஆட்சிக்காலத்தின்போது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அறிவித்த திட்டத்தை தனது தலைமையிலான அரசு நிறைவேற்றி, அம்பேத்கர் சர்வதேச மையம் உருவாக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் இந்த திட்டம் இழுத்தடிக்கப்பட்டு வந்ததாகவும், அம்பேத்கருக்கு எனது அரசு அளித்த கவுரவத்தைப்போல் வேறு எந்த அரசும் அளித்தது கிடையாது. அம்பேத்கரின் உயிர் பிரிந்த இடமான டெல்லி அலிப்பூர் சாலையில் உள்ள 26-ம் எண் கொண்ட வீடு, அவரது பிறந்தநாளான வரும் 13-ம் தேதி நினைவு இல்லமாக நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் என பிரதமர் மோடி இன்று தெரிவித்துள்ளார்.  #Ambedkar #NarendraModi #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com