முசாபர்பூர் சாலை விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிதி

பீகார் மாநிலம் முசாபர்பூரில் நடைபெற்ற சாலை விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிதி வழங்கப்படும் என முதல் மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்
நிதிஷ் குமார்
நிதிஷ் குமார்
Published on

பாட்னா:

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தின் கான்டி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த சொகுசு காரும், டிராக்டரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் கார் முழுவதும் சிதைந்தது. அதில் பயணித்தவர்கள், இடிபாடுகளில் சிக்கி உடல் உறுப்புகளை இழந்து துடித்தனர். கான்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. 

தகவலறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், முசாபர்பூரில் நடைபெற்ற சாலை விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிதி வழங்கப்படும் என  முதல் மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com