

மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பபானிபூர் தொகுதியில் ஒவ்வொரு சுற்றிலும் முன்னிலை நிலவரம் மாறிக்கொண்டே இருக்கிறது.
அங்கு பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியை விட திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி மூன்றாம் சுற்று முடிவில் மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார்.
சுவேந்து அதிகாரி 8,461 வாக்குகள் பெற்ற நிலையில் மம்தா பானர்ஜி 9,359 வாக்குகளுடன் 898 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
ஆனால் ஒட்டுமொத்தமாக மேற்கு வங்கத்தில் பாஜக 181 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் 104 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
293 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் பெரும்பான்மைக்கு 148 இடங்கள் தேவை. ஆனால் பாஜக 181 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் அறுதிபெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.
மேற்கு வங்க வரலாற்றில் முதல் முறையாக அமையும் பாஜக ஆட்சி இதுவாகும்