

5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்தார்.
அதன்படி தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
இதில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், கேரளா, புதுச்சேரி, அசாம் மாநிலங்களுக்கு ஏப்ரல் 9-ந்தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மேற்கு வங்கத்தில் மட்டும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
முதற்கட்டமாக ஏப்ரல் 23-ந்தேதி 152 தொகுதிகளுக்கும், 2-ம் கட்டமாக ஏப்ரல் 29-ந்தேதி 142 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும் என ஞானேஷ்குமார் அறிவித்தார்.
ஐந்து மாநிலங்களில் மே 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே முடிவும் வெளியிடப்படுகிறது.
இந்நிலையில், மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது.
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 144 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை பாஜக வெளியிட்டது.
கேரளாவை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.