வயநாடு நிலச்சரிவுக்கு தொழில்நுட்ப கோளாறு காரணமா? - சுரங்கப்பாதை நிறுவனம் விளக்கம்

வயநாட்டில் நேற்று காலை முதலே கனமழை பெய்தது.
wayanad landslide
Published on

வயநாட்டில் கனமழை

கேரளம் மாநிலம் வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் 8% கி.மீ. நீள சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அனக்கம்பொயில்- கல்லாடி-மேப்பாடி வழியாக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சுரங்கப் பாதை திட்டம் மூலம் வயநாட்டில் இருந்து கோழிக்கோட்டுக்கு செல்லும் பயணம் நேரம் குறையும். அதோடு இது கேரளத்தில் அமைக்கப்படும் நீளமான சுரங்கப்பாதை திட்டம் ஆகும்.

சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் வடமாநில தொழிலாளர்கள் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக கல்லாடி பகுதியில் சுரங்கப்பாதை நுழைவுவாயில் அருகே தற்காலிகமாக ஷெட்டுகள் அமைத்து அவர்கள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

இதற்கிடையே, வயநாட்டில் நேற்று காலை முதலே கனமழை பெய்தது.

நிலச்சரிவு

அப்போது மேப்பாடி அடுத்த கல்லாடி பகுதியில் மீனாட்சி பாலம் பகுதியில் சுரங்கப்பாதை நுழைவுவாயில் அருகே 20 தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு இருந்தனர். காலை 11.15 மணியளவில் சுரங்கப்பாதை நுழைவுவாயில் அருகே திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மலைச்சரிவில் இருந்து நீரோடு மண் அடித்து வரப்பட்டது. நிலச்சரிவு அங்குள்ள சாலையை மூடியது. அந்த சமயத்தில் சாலையில் சென்ற டேங்கர் லாரியை நிலச்சரிவு பின்னோக்கி தள்ளியபடி சென்றது.

இதை பார்த்த பிற வாகன ஓட்டிகள் பதறியபடி தங்களது வாகனங்களை பின்னோக்கி இயக்கி சென்றனர். மேலும் அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் உயிரை கையில் பிடித்தபடி ஓட்டம் பிடித்தனர்.

ஆனால் சுரங்கப்பாதை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் 20 பேரில் சிலர் நிலச்சரிவில் சிக்கினர்.

தகவல் அறிந்த முதல்-மந்திரி வி.டி.சதீசன் மீட்பு பணிகளை முடுக்கி விட்டார். அவரது உத்தரவின்பேரில், தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், வயநாடு போலீசார். வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

நிலச்சரிவுக்கு பின்பும் கனமழை பெய்ததால், மீட்பு பணியை மேற்கொள்வது சவாலாக இருந்தது. இருப்பினும், மீட்பு குழுவினர் ஒருங்கிணைந்து முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலச்சரிவில் சிக்கி 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் பலரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

திலீப் பில்டுகான் நிறுவனம்

இந்நிலையில், நிலச்சரிவு குறித்து திலீப் பில்டுகான் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில்,

அனைத்து ஒப்புதல்களும் பெற்றுத்தான் சுரங்கப்பாதை திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

சம்பந்தப்பட்ட இடம் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், சுப்ரீம் கோர்ட்டு நியமித்த குழு உள்பட பல்வேறு அமைப்புகள் கண்காணித்து வருகின்றன. அகழாய்வு செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் விதிமுறைப்படி கையாளப்படுகின்றன. எனவே. தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com