சீனாவுக்கான இந்திய தூதராக விக்ரம் துரைசாமி நியமனம் | Vikram K doraiswami

தமிழகத்தை சேர்ந்த விக்ரம் துரைசாமியின் தந்தை வங்கதேச போரில் பங்கேற்ற விமானப்படை வீரர் ஆவார்.
சீனாவுக்கான இந்திய தூதராக விக்ரம் துரைசாமி நியமனம் | Vikram K doraiswami
Published on

சீனாவுக்காக புதிய இந்தியத் தூதராக மூத்த அதிகாரி விக்ரம் கே. துரைசாமி(56) நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய வெளியுறவு அமைச்சகம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விக்ரம் துரைசாமி இதற்கு முன்பு வங்கதேசத்தில் இந்திய உயர் ஆணையராகவும், உஸ்பெகிஸ்தான் மற்றும் தென்கொரியாவில் இந்தியத் தூதராகவும் பணியாற்றியுள்ளார்.

தற்போது பிரிட்டன் இந்திய உயர் ஆணையராகப் பணியாற்றி வருகிறார்.

பிரதமர் அலுவலகத்தில் தனிச் செயலாளராகவும், வெளியுறவு அமைச்சகத்தில் சார்க் மற்றும் இந்தோ-பசிபிக் பிரிவுகளின் தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு.

இவர் ஹாங்காங் சீனப் பல்கலைக்கழகத்தில் சீன மொழியில் சிறப்புப் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது

1992-ஆம் ஆண்டு பேட்ச் ஐ.எஃப்.எஸ் அதிகாரியான இவர், பிரதீப் குமார் ராவத்திற்குப் பிறகு பெய்ஜிங்கில் பொறுப்பேற்பார்.

தமிழகத்தை சேர்ந்த விக்ரம் துரைசாமியின் தந்தை வங்கதேச போரில் பங்கேற்ற விமானப்படை வீரர் ஆவார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com