இந்தியாவில் முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் 4வது தலைவர் விஜய்

233 தொகுதிகளில் தனித்து களம் கண்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்தியாவில் முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் 4வது தலைவர் விஜய்
Published on

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக 53 இடங்களிலும் வென்றுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு கட்சி தொடங்கி விஜய், 2 ஆண்டுகளில் தனது முதல் சட்டசபை தேர்தலிலேயே 233 தொகுதிகளில் தனித்து களம் கண்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். தவெக பெற்ற வாக்கு சதவீதம் 34.92 ஆகும்.

பெரும்பான்மையை தவறவிட்டபோதும் பிற கட்சிகள் ஆதரவுடன் அவர் ஆட்சி அமைக்க உள்ளார். கட்சி தொடங்கி முதல் தேர்தலிலேயே வென்று ஆட்சி அமைப்பது இந்தியாவில் முதல் முறை அல்ல. விஜய் இந்த வரிசையில் நான்காம் இடத்தில் உள்ளார்.

முன்னதாக தமிழகத்தில் திமுகவில் இருந்து விலகி 1972 இல் அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆர், 1977 தேர்தலில் முதல் முறையாக களம் கண்டார். அத்தேர்தலில் அதிமுக போட்டியிட்ட 155 தொகுதிகளில் 130 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. மொத்தம் 30.36 சதவீத வாக்குகளைப் பெற்றது.

அடுத்ததாக ஆந்திரப்பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கிய 9 மாதத்தில் 1983 தேர்தலில் களம் கண்டு நடிகர் என்டிஆர் ஆட்சியை பிடித்தார். அந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 289 தொகுதிகளில் போட்டியிட்டு, 201 இடங்களில் என்றது. அதன் வாக்கு சதவீதம் 46.30 ஆக இருந்தது.

மூன்றாவதாக அண்ணா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று அறியப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் 2012ல் ஆம் ஆத்மியை தொடங்கினார். 2013 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்ட அக்கட்சி களம் கண்ட 70 தொகுதிகளில் போட்டியிட்டு 28ல் வென்றது. மொத்தம் 29.49 சதவீத வாக்குகளை பெற்றது. கெஜ்ரிவால் முதல்வரானார்.

X

Maalai Malar
www.maalaimalar.com