மனைவியுடன் தாஜ்மஹாலை ரசித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர்

இந்தியாவின் பன்முக கலாச்சாரம் மற்றும் வரலாற்றுக்கு மார்கோ ரூபியோ மரியாதை செலுத்தினார்.
மனைவியுடன் தாஜ்மஹாலை ரசித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர்
Published on

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முதன்மை உதவியாளரான அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ நான்கு நாள் பயணமாக இந்திய வந்தடைந்தார்.

முதல் இரண்டு நாட்களில், புது தில்லியில் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் தொடர்ச்சியான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்தது.

மேலும் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலை பார்வையிட்டுள்ளனர்.

இந்தியா பன்முகத்தன்மை மற்றும் மகத்தான வரலாற்றைக் கொண்ட ஒரு பெரிய நாடாகும். இந்தியாவிலுள்ள சில கலாச்சாரத் தளங்களைப் பார்வையிடவும், இந்த நாட்டிற்கு மரியாதை செலுத்தவும் இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது என்று ரூபியோ தெரிவித்தார்.

இந்தப் பயணம் நாளை டெல்லியில் நடைபெறும் குவாட் கூட்டத்துடன் முடிவடைகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com