Video | பிரியாணியில் லெக் பீஸ் இல்லையா?... திருமண விருந்தில் ஏற்பட்ட மோதல் - அதிர்ச்சி வீடியோ

ஆத்திரமடைந்த விருந்தினர்கள் ஒருவரையொருவர் நாற்காலிகள் மற்றும் பாத்திரங்களால் சரமாரியாகத் தாக்கிக்கொண்டனர்.
UP Viral Video
UP Viral Video
Published on

திருமண விழாவில், பிரியாணியில் 'சிக்கன் லெக் பீஸ்' கிடைக்கவில்லை என்ற தகராறு பயங்கர மோதலாக மாறிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் நடைபெற்ற திருமண விழாவில், பிரியாணி பரிமாறப்பட்டது. ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகத் தொடங்கிய விருந்து, உணவு பரிமாறும்போது லெக் பீஸ் இல்லையென ஏற்பட்ட சிறு வாக்குவாதத்தால் திடீரென வன்முறையாக உருவெடுத்தது..

இதனால் ஆத்திரமடைந்த விருந்தினர்கள் ஒருவரையொருவர் நாற்காலிகள் மற்றும் பாத்திரங்களால் சரமாரியாகத் தாக்கிக்கொண்டனர்.

திருமண மண்டபத்தையே போர்க்களமாக மாற்றிய இந்த வினோத மோதல் குறித்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com