UP: அலட்சியமே அசந்து போகும் அலட்சியம்.. நடுவில் அடி பம்புடன் அமைக்கப்பட்ட புத்தம்புது சாலை

அதிகாரிகளின் உச்சகட்ட அலட்சியத்தை பறைசாற்றும் இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி கேலிக்கும் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது.
UP: அலட்சியமே அசந்து போகும் அலட்சியம்.. நடுவில் அடி பம்புடன் அமைக்கப்பட்ட புத்தம்புது சாலை
Published on

உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை கவனம் ஈர்த்து வருகிறது.

காரணம், சாலையின் நடுவில் இருந்த அடி பம்பை அகற்றாமல், ஒப்பந்ததாரரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அதைச் சுற்றி கான்கிரீட் ஊற்றி பணியை முடித்துள்ளனர்.

இதன் விளைவாக, அந்த பம்ப் தற்போது சாலையின் குறுக்கே வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தான நிலையில் நிற்கிறது. குறிப்பாக இரவில், விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று உள்ளூர் மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

அதிகாரிகளின் உச்சகட்ட அலட்சியத்தை பறைசாற்றும் இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி கேலிக்கும் கண்டனத்துக்கும் உள்ளாகி வருகிறது.

அடி பம்பை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விசாரணை நடத்தப்பட்டு, பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com