

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் வெளிநாட்டவர் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 பேர் உள்பட மொத்தமாக 17 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்தோரின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அமித்ஷா அஞ்சலி செலுத்தினார்.
#WATCH | Union Home Minister Amit Shah pays tributes to the victims of the Pahalgam terror attack, in Srinagar, J&K pic.twitter.com/tPRSj4ewUg