துப்பாக்கியை தூக்கி விடுவார்கள்: செய்தியாளரை எச்சரித்த ரஷிய மந்திரி

ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரோவ் இந்தியா வந்துள்ளார்.
துப்பாக்கியை தூக்கி விடுவார்கள்: செய்தியாளரை எச்சரித்த ரஷிய மந்திரி
Published on

தலைநகர் டெல்லியில் பிரிக்ஸ் அமைப்பின் வெளியுறவு மந்திரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரோவ் இந்தியா வந்தார்.

இந்நிலையில், ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரோவ் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் தொடர்ந்து போனில் பேசிக் கொண்டிருந்தார். இது லாவ்ரோவுக்கு பெரும் இடையூறாக இருந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த ரஷிய வெளியுறவு மந்திரி, அந்த செய்தியாளரை அரங்கை விட்டு வெளியேறும்படி கூறினார்.

அத்துடன் உங்கள் கைபேசியை ஒப்படைக்காவிட்டால் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியை வெளியே எடுப்பார்கள் என எச்சரிக்கையும் விடுத்தார். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com