இந்தியாவில் இந்து அல்லாதவர் என யாருமே இல்லை - மோகன் பகவத் சர்ச்சை பேச்சு

முதலாவது பிரிவினர் இந்துவாக இருப்பதில் பெருமை கொள்பவர்கள் இரண்டாவது பிரிவினர் இந்துவாக இருப்பதில் பெருமைப்படுவதில்லை
இந்தியாவில் இந்து அல்லாதவர் என யாருமே இல்லை - மோகன் பகவத் சர்ச்சை பேச்சு
Published on

இந்தியா ஒரு இந்து நாடு என்றும், நாட்டில் உள்ள முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இந்து மூதாதையர்களின் சந்ததியினர் என்றும் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் மோகன் பகவத் இதனை தெரிவித்தார்.

அந்நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், "பண்டைய காலத்தில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டவர்கள் இந்த மண்ணில் வாழும் மக்களைக் குறிக்க இந்து என்ற வார்த்தையைப் பயன்படுத்தினர்.

இந்து சமூகத்தை நான்கு குழுக்களாக வகைப்படுத்தபட்டுள்ளது. முதலாவது பிரிவினர் இந்துவாக இருப்பதில் பெருமை கொள்பவர்கள். இரண்டாவது பிரிவினர் தாங்கள் இந்துக்கள் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள், ஆனால் அதில் பெருமைப்படுவதில்லை. மூன்றாவது பிரிவினர் தங்களை தனிப்பட்ட முறையில் இந்துக்கள் என்று கருதுபவர்கள், ஆனால் வெளிப்படையாக தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளாதவர்கள். நான்காவது பிரிவினர் தாங்கள் இந்துக்கள் என்பதை மறந்துவிட்டார்கள்.

இந்தியா ஒரு இந்து நாடு. இங்குள்ள முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ஒரே மூதாதையர்களின் சந்ததியினர். இந்து சமூகம் ஒன்றுபட்ட சக்தியாக ஒன்றுபட வேண்டும்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com