74 வயது மூதாட்டியை கற்பழித்து கொன்ற தொழிலாளி- போலீசார் கைது செய்து விசாரணை

அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அந்த மூதாட்டியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மூதாட்டி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
74 வயது மூதாட்டியை கற்பழித்து கொன்ற தொழிலாளி- போலீசார் கைது செய்து விசாரணை
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது பக்கத்து வீட்டில் 74 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வந்தார்.

இவரது வீடு நேற்று முழுவதும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது அங்கு மூதாட்டி ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.

அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அந்த மூதாட்டியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மூதாட்டி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் மூதாட்டியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மூதாட்டி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் வழக்க பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மூதாட்டியின் வீடு அருகே வசித்து வந்த ராஜன், அவரை கற்பழித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com