LPG உடன் ஹார்முஸை கடந்து இந்தியா வந்து சேர்ந்தது ஷிவாலிக் கப்பல்!

ஷிவாலிக்
ஷிவாலிக்
Published on
Summary

இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க இந்த இரண்டு கப்பல்களின் வருகை மிக முக்கியமானது.

மத்திய கிழக்கு போர் சூழலில் வளைகுடா நாடுகளுடன் முக்கிய வர்த்தக பாதையான ஹார்முஸ் ஜலசந்தி ஈரான் கட்டுப்பாட்டில் உள்ளது.

இவ்வழியாக அமெரிக்க - இஸ்ரேல் மற்றும் அதன் ஆதரவு நாடுகளின் கப்பல்கள் செல்ல அனுமதி மறுத்த ஈரான் மற்ற நாட்டு கப்பல்களை அனுமதிக்கிறது.

அந்த வகையில் இந்தியக் கொடி ஏந்திய ஷிவாலிக், நந்தா தேவி ஆகிய இரண்டு பெரிய எல்பிஜி டேங்கர் கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல ஈரான் அதிகாரிகள் சிறப்பு அனுமதி வழங்கியிருந்தனர்.

இந்த இரண்டு கப்பல்களும் இணைந்து மொத்தம் 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி (சமையல் எரிவாயு) உடன் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தன.

அதில் சிவாலிக் கப்பல் இன்று குஜராத்தின் முந்ரா துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது.

மற்றொரு டேங்கர் கப்பலான இது, நாளை செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) குஜராத்தின் காண்ட்லா துறைமுகத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க இந்த இரண்டு கப்பல்களின் வருகை மிக முக்கியமானது.

பாரசீக வளைகுடா பகுதியில் இந்தியக் கொடி ஏந்திய மொத்தம் 24 கப்பல்கள் உள்ளன. இதில் உள்ள அனைத்து இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதாக கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சின்ஹா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com