ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது துப்பாக்கிசூடு நடத்திய பயங்கரவாதிகள்

படோட் பஞ்சாயத்தில் உள்ள ராணுவ முகாமுக்கு அருகே பயங்கரவாதிகள் நடமாட்டம்.அதன்பின் அருகிலுள்ள காட்டுக்குள் தப்பிச் சென்றனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

ஜம்மு காஷ்மீரில் கதுவா மாவட்டத்தில் இன்று [சனிக்கிழமை] அதிகாலையில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

படோட் பஞ்சாயத்தில் உள்ள தற்காலிக ராணுவ முகாமுக்கு அருகே இன்று அதிகாலை 1:20 மணியளவில் சந்தேகத்திற்கிடமான வகையில் பயங்கரவாதிகளின் நடமாட்டத்தைக் கண்டறிந்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

பதிலுக்கு பயங்கரவாதிகள் முகாம் மீது திருப்பிச் சுட்டதாகவும், இருதரப்புக்கும் இடையே சுமார் அரை மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் இரு தரப்பிலும் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. பயங்கரவாதிகள், மூன்று பேர் இருக்கலாம் என்றும் அவர்கள் அதன்பின் அருகிலுள்ள காட்டுக்குள் தப்பிச் சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தப்பியோடியவர்களைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com