

மேற்கு வங்க மாநிலம் அசன்சோலில் காங்கிரஸ் தொண்டர் தேப்தீப் சட்டர்ஜி படுகொலை செய்யப்பட்டதற்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர்,
தேர்தலுக்குப் பிந்தைய சூழலில், திரிணாமுல் காங்கிரஸை சார்ந்த குண்டர்களால் காங்கிரஸ் தொண்டர் தேப்தீப் சட்டர்ஜி படுகொலை செய்யப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேற்கு வங்கத்தில் இன்று நிலவுவது ஜனநாயகம் அல்ல, திரிணாமுல் காங்கிரஸின் பயங்கரவாதம். வாக்குப்பதிவு முடிந்த பிறகு, மாற்றுக் கருத்து கொண்டவர்களை மிரட்டுவது, தாக்குவது, அவர்களை ஒழித்துக்கட்டுவது என்பதே திரிணாமுல் காங்கிரஸின் அடையாளமாக மாறிவிட்டது.
காங்கிரஸ் கட்சியின் அரசியல் ஒருபோதும் வன்முறையை அடிப்படையாகக் கொண்டதாக இருந்ததில்லை; இனியும் இருக்காது. நாங்களும் எங்கள் தொண்டர்களை இழந்துள்ளோம்; ஆயினும், நாங்கள் எப்போதும் அகிம்சை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் பாதையையே தேர்ந்தெடுத்துள்ளோம். இதுவே எங்கள் மரபு; இதுவே எங்கள் உறுதிப்பாடு.
எங்கள் கோரிக்கை மிகத் தெளிவானது: குற்றமிழைத்த அனைவரும் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்; அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்; மேலும், தேப்தீப்பின் குடும்பத்தினருக்கு முழுமையான பாதுகாப்பும், உரிய இழப்பீடும் உறுதி செய்யப்பட வேண்டும்.
இந்தியாவின் அகிம்சை மரபிற்கு களங்கம் விளைவிக்கும் இந்த அரசியலுக்கு முன்னால் நாம் ஒருபோதும் பணிய மாட்டோம். நீதி நிச்சயம் நிலைநாட்டப்படும்.” என தெரிவித்துள்ளார்.