

தெலங்கானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வேப்பை அலை வீசி வருகிறது. இந்த வெப்ப அலையின் தாக்கத்தில் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
பகல் நேரங்களில் வெளியே செல்ல அஞ்சியதால் மக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
காற்றில் ஈரப்பதம் முற்றிலுமாக குறைந்துவிட்டதால் இரவு நேரத்திலும் கூட வெப்ப அலையும், சுட்டெரிக்கும் வெப்பமும் தணியவில்லை. இதனால், மக்கள் இரவு நேரத்திலும் கூட கடுமையான சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
அங்கு, இந்த மாதம் 26 ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் வெப்ப அலையின் தீவிரம் தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள், காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.