எரிபொருள் தட்டுப்பாடு என்பது வதந்தி: பீதியில் வாங்குவதை தவிர்க்கவும்- மக்களுக்கு தெலுங்கானா அரசு வேண்டுகோள்

தெலுங்கானாவில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை. மக்கள் பீதியில் வாங்க குவிய வேண்டாம் என்று அம்மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது
எரிபொருள் தட்டுப்பாடு என்பது வதந்தி: பீதியில் வாங்குவதை தவிர்க்கவும்- மக்களுக்கு தெலுங்கானா அரசு வேண்டுகோள்
Published on

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் பணம் செலுத்தியும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் வழங்கவில்லை. இதனால் பங்க் மூடப்பட்டதாக உரிமையாளர் தெரிவித்தார். அத்துடன், சில சிலிண்டர் ஏஜென்சிகளும் மூடப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் கியாஸ் சிலிண்டர், பெட்ரேல் மற்றும் டீசல் தட்டுப்பாடு என்பது வதந்தி. பீதியில் மக்கள் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்குவதை மக்கள் தவிர்க்கவும் என்று தெலுங்கானா அரசும், டீலர்களும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

HPCL, IOCL, BPCL எண்ணெய் நிறுவனங்களிடம் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. எந்தவொரு நிறுவனங்களிடமும் தட்டுப்பாடு என்பது இல்லை என அரசு தெரிவித்துள்ளது.

மக்கள் பீதியால் அதிக அளவில் வாங்குகின்றனர். இதனால் நாள் ஒன்றுக்கு திடீரென 25 சதவீதம் தேவை அதிகரித்துள்ளது. சாரசரிக்கு மேல் 22 சதவீதம் பராமரிக்கப்பட்டு வருதால், தட்டுப்பாடு இன்றி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் என். உட்டம் குமார் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com