தெலுங்கானாவில் பெட்ரோல் பங்க், கியாஸ் சிலிண்டர் ஏஜென்சிகள் மூடல்- பொதுமக்கள் அவதி

பெல்லாரம் நகரில் உள்ள கியாஸ் ஏஜென்சி எரிவாயு சிலிண்டர்கள் இருப்பு இல்லை என போர்டு வைத்துள்ளனர்.
தெலுங்கானாவில் பெட்ரோல் பங்க், கியாஸ் சிலிண்டர் ஏஜென்சிகள் மூடல்- பொதுமக்கள் அவதி
Published on: 

இஸ்ரேல், ஈரான் போர் காரணமாக தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத், பாட்னி சென்டர் என்ற இடத்தில் உள்ள பெட்ரோல் பங்க் மூடப்பட்டது. இந்த பெட்ரோல் பங்கில் உரிமையாளர் முன்கூட்டியே பெட்ரோல் நிறுவனங்களுக்கு பணம் செலுத்திய பெட்ரோல், டீசல் வழங்கப்படவில்லை. இதனால் 5 நாட்களுக்கு பெட்ரோல் பங்க் மூடப்படும் என அதன் உரிமையாளர் தெரிவித்தார்.

இதேபோல் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக செகந்திராபாத்தில் உள்ள எரிவாயு வழங்கும் பல்வேறு கியாஸ் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது.

பெல்லாரம் நகரில் உள்ள கியாஸ் ஏஜென்சி எரிவாயு சிலிண்டர்கள் இருப்பு இல்லை என போர்டு வைத்துள்ளனர்.

செகந்திராபாத்தில் உள்ள உஜ்ஜைன் மகாகாளி கோவிலில் தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தன. சமையல் எரிவாயு பற்றாக்குறை காரணமாக அன்னதானம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com