search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    லஞ்சம் வாங்கி குவித்த பெண் தாசில்தார்- 1462 கிராம் தங்கம் ரூ.3.2 கோடி ஆவணங்கள் பறிமுதல்
    X

    லஞ்சம் வாங்கி குவித்த பெண் தாசில்தார்- 1462 கிராம் தங்கம் ரூ.3.2 கோடி ஆவணங்கள் பறிமுதல்

    • லஞ்ச ஒழிப்பு போலீசார் மார்கலா ரஜனியின் வீடு மற்றும் அவரது உறவினர்கள், கூட்டாளிகள் மற்றும் பினாமி என்று சந்தேகப்படும் நபர்களின் வீடுகளுக்குச் சொந்தமான 5 இடங்களில் சோதனை நடத்தினர்.
    • சோதனையில் கணக்கில் வராத ரொக்கப்பணம் ரூபாய் 1.5 லட்சம் கண்டு பிடிக்கப்பட்டது.

    தெலுங்கானா:

    தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் ஜம்மிகுண்டா மண்டல் தாசில்தார் மற்றும் இணைப்பதிவாளர் மார்கலா ரஜனி. ஊழல் புகாரில் சிக்கியதற்காக இவர் மீது அந்த மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் மார்கலா ரஜனியின் வீடு மற்றும் அவரது உறவினர்கள், கூட்டாளிகள் மற்றும் பினாமி என்று சந்தேகப்படும் நபர்களின் வீடுகளுக்குச் சொந்தமான 5 இடங்களில் நேற்று சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் கணக்கில் வராத ரொக்கப்பணம் ரூபாய் 1.5 லட்சம் கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் வங்கி கணக்கில் 25.70 லட்சம் இருந்ததை கண்டுபிடித்தனர்.

    மேலும் 1462 கிராம் எடையுள்ள தங்க ஆபரணங்கள், ரூ.9 லட்சம் மதிப்புள்ள வீட்டுப் பொருட்கள், 31 லட்சம் மதிப்புள்ள கார் உள்ளிட்ட வாகனங்கள், 55 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 7 ஏக்கர் விவசாய நிலம், ரூ.21 லட்சம் மதிப்புள்ள 22 வீட்டு மனை ஆவணங்கள் சுமார் 3.2 கோடி ரூபாய் மதிப்புள்ள கணக்கில் வராத சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இவை அனைத்தும் லஞ்சமாக வாங்கி குவித்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×