நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் தமிழிசை சவுந்தரராஜன் சந்திப்பு

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சந்தித்தார். தொலைநோக்கு பார்வையுடன் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
நிர்மலா சீதாராமன், தமிழிசை சவுந்தரராஜன்
நிர்மலா சீதாராமன், தமிழிசை சவுந்தரராஜன்
Published on

புதுடெல்லி:

தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார்.

அப்போது, தொலைநோக்கு பார்வையுடன் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக்கூறி நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டு தெரிவித்தார்.

தொடர்ந்து, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில வருங்கால முன்னேற்ற திட்டங்கள் குறித்து டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், நிர்மலா சீதாராமனுடன் ஆலோசனை நடத்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com