வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்த இளம்பெண் கொலை- காதலன் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை

காதலி இறந்த துக்கம் தாங்காமல் காதலனும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.போலீசார் வழக்கு பதிவு செய்து கீர்த்தியின் தந்தை கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.
வேறு சமூகத்தை சேர்ந்தவரை காதலித்த இளம்பெண் கொலை- காதலன் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை
Published on

திருப்பதி:

சித்தூர் மாவட்டம், பங்காருபேட்டை, போட குர்கியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் கீர்த்தி.

இவர் அதே பகுதியை சேர்ந்த கங்காதரன் என்பவரை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தார்.

இவர்களது காதல் விவகாரம் கீர்த்தியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் ஊரில் உள்ள பெரியவர்கள் இவர்களது காதலை கண்டித்தனர். இருப்பினும் காதலர்கள் இருவரும் ரகசியமாக சந்தித்து வந்தனர். வேறு சாதியை சேர்ந்த வாலிபரை மகள் காதலிப்பதை கீர்த்தியின் தந்தை அவமானமாக கருதினார்.

எவ்வளவு கண்டித்தும் இருவரும் ரகசியமாக சந்திப்பதை அறிந்த கிருஷ்ணமூர்த்தி ஆத்திரம் அடைந்தார்.

இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி நேற்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

கீர்த்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கிராமத்தில் பரவியது.

காதலி இறந்த தகவல் அறிந்த கங்காதரன், பங்காருபேட்டை ரெயில் நிலையத்திற்கு சென்றார்.

அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கீர்த்தியின் தந்தை கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.

காதலி இறந்த துக்கம் தாங்காமல் காதலனும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com